May 6, 2024

மா மன் னன் பட வில் ல னால் கொ ழுந்து வி ட்டு எரியு ம் ஜா தி பாட ல்கள் ..!! சும் மா கிட ந்த சங் கை ஊதி கெடுத் த மா ரி செ ல்வரா ஜ் ..!! நினை ச்சது ஒண் ணு நட ந்தது ஒண் ணு ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் மாரி செல்வராஜ் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தனுஷை  வைத்து கர்ணன் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியிருந்தார் . இதை அடுத்து சமீபத்தில்,

உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ் . இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு , பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் . இந்தப் படத்தில் ஜாதி வெறி கொண்ட வில்லனாக ரத்தினவேல் என்ற ,

கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார் மலையாள நடிகர் பகத் பாசில் . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஹீரோவை கொண்டாடாமல் வில்லனை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்  . அந்த வகையில் பகத் பாசிலின் வீடியோவையும் புகைப்படத்தையும் வைத்து,

ஜாதி பெருமை பேசும் பாடல்களை இணைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  குறிப்பாக மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசிலை தற்போது ஹீரோவாக மாற்றியுள்ளனர் நெட்டிசன்கள் . இப்படி கொழுந்துவிட்டு எரியும் நேரத்தில் எண்ணெய்யை,

ஊற்றி பரபரப்பை கிளப்பியுள்ளார் நடிகர் பகத் பாசில் . அந்த வகையில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் மாமன்னன் படத்தின் போது எடுத்த புகைப்படத்தை கவர் போட்டோவாக வைத்து எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றி சம்பவம் செய்துள்ளார் நடிகர் பகத் பாசில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *