April 26, 2024

சந்தானம் என்ன இப்படி மாறிட்டாரு ..?? சுத்தமா அடையாளமே தெரியல..!! வெளியான புகைப்படத்தை பார்த்து குழம்பிபோன ரசிகர்கள் ..!!

சந்தானம் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார்.  ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமான சந்தானம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான பேசாத கண்ணும் பேசுமே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  இதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சந்தானத்துக்கு வல்லவன், பொல்லாதவன்,

சிவா மனசுல சக்தி ,தீராத விளையாட்டுப் பிள்ளை, பாஸ் என்கிற பாஸ்கரன் ,சிறுத்தை போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது  வ=என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி பிஸியான காமெடி நடிகராக இருந்து வந்த சந்தானம்,

ஒரு கட்டத்தில் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று முடிவெடுத்தார் . அப்படி ஆரம்பத்தில் இவர் நடித்த  ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் சமீப காலமாக இவர் நடித்த எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை .

அப்படி இருந்தும் கூட தற்போது பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் சந்தானம்.  அந்த வகையில் டிக்கிலோனா படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவான வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் சந்தானம்.

குறிப்பாக இந்த படத்திற்காக தன்னுடைய கெட்டப்பையே  மாற்றி இருக்கிறார் சந்தானம் . இதை பார்த்த பலரும் சந்தானமா இது .? ஆளே சுத்தமா அடையாளம் தெரியலையே என்று கூறி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Santhanam (@santa_santhanam)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *