April 29, 2024

லியோ ஒரு மறக்கமுடியாத படம் ..!! படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து..!! நெகிழ்ச்சியடைந்த திரிஷா ..!! இதோ நீங்களும் பாருங்க ..!!

கடந்த வாரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ . இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துத அசத்திய விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத் , திரிஷா, அர்ஜுன் ,கௌதம் வாசுதேவன் மேனன் , மிஸ்கின் ,மடோனா செபாஸ்டின் , பிரியா ஆனந்த் , சாண்டி மாஸ்டர் போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான திரைப்படம்,

சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் வசூலிலும் பிரம்மாண்ட சாதனை செய்து வருகிறது . மேலும் பல வருடங்கள் இடைவேளைக்கு பிறகு இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை திரிஷா . இதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது .

ஏற்கனவே இவர்களுடைய நடிப்பில் வெளியான கில்லி ,திருப்பாச்சி ,ஆதி,  குருவி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . இதை அடுத்து ஐந்தாவது முறையாக இணைந்த கூட்டணியும் சூப்பர் ஹிட் கூட்டணியாக அமைந்துள்ளது.  இப்படி இருக்கும் நிலையில்,

லியோ படத்தின் படப்பிடிப்பில் எடுத்த மொத்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து  நெகிழ்ச்சி அடைந்துள்ளார் நடிகை திரிஷா . இதோ அந்த  புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *