April 28, 2024

சூப்பர் ஸ்டார் போல வர வேண்டியவர் ..!! குடிப்பழக்கத்தால் காமெடியனான நடிகர் ..!! இப்படி வாழ்க்கையே தொலைத்துவிட்டாரே ..??

பொதுவாகவே சினிமாவில் வாய்ப்பு கிடைத்தாலும்,  அதன் பிறகு அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம் . அப்படி சூப்பர் ஸ்டார் அளவிற்கு வர வேண்டிய நடிகர் குடிப்பழக்கத்தால் காமெடியானது தான் சோகமே . அவர் வேறு யாருமில்லை நடிகர் சுதாகர் தான்.  1978 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக,

அறிமுகமானார் சுதாகர் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த சுதாகர் தொடர்ந்து பொண்ணு ஊருக்கு புதுசு ,நிறம் மாறாத பூக்கள் ,சுவரில்லாத சித்திரங்கள், தைப்பொங்கல் போன்ற சாலை சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

குறிப்பாக இவருடைய சுருள் மூடி,  எதார்த்தமான புன்னகை இதெல்லாம் அப்போது பெண் ரசிகைகளை வெகுவாகவே கவர்ந்தது . இதனால் ஆண் ரசிகர்களை விட சுதாகருக்கு பெண் ரசிகைகள் தான் அதிகமாக இருந்தனர் .  அதுவும் அப்போது இவருடைய படங்களோடு ரிலீசான ,

ரஜினி படங்கள் எல்லாம் தோல்வி அடைந்தது . அந்த அளவிற்கு டாப் நாயகனாக கலக்கிக்கொண்டு வந்தார் நடிகர் சுதாகர் . ஆனால் இடையில் குடிப்பழக்கம் மற்றும் தவறான பழக்கத்தால் பட வாய்ப்பை  இழந்தார் சுதாகர்.  இதன் பிறகு தமிழில் பட வாய்ப்பு குறைந்ததும்,

தெலுங்கு சினிமாவில் காமெடியனாக கலக்கிக் கொண்டு வந்தார் சுதாகர் . இவர் மட்டும் அப்போது கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் இன்று ஒரு உச்ச நடிகராக இருந்திருப்பார் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *