April 30, 2024

அமுல் பேபி போல இருந்த ஹன்சிகா ..!! இப்ப ஒட்டடை குச்சி போல மாறிவிட்டாரே ..!! லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..!!

ஹன்சிகா மோத்வானி ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.  ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக்கொண்டு வந்த ஹன்சிகா தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் பல திரைப்படங்களில் நடித்து வந்த ஹன்சிகா கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ,

கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம் ,ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு ,சிங்கம் 2 ,மான் கராத்தே, அரண்மனை  போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென  ஒரு தனி இடத்தை ,

பிடித்துக் கொண்டார்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த வருடம் சோஹைல்  கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இப்படி இருக்கும் நிலையில் அமுல் பேபி போல கொழு கொழுவென  இருந்து வந்த ஹன்சிகா தற்போது ஒட்டடை குச்சி  போல மாறி இருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவா இது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *