April 28, 2024

ரசிகர்களுக்கு தரிசனம் காட்டிய கேப்டன் விஜயகாந்த் ..!! எத்தனை நாள் ஆச்சு இவரை இப்படி பார்த்து ..!! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் எந்த அளவிற்கு ரஜினி,  கமலுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ , அதே அளவிற்கு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் உள்ளது.  அந்த வகையில் சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் சென்னைக்கு வந்த விஜயகாந்த் பல வருட போராட்டத்திற்குப் பிறகு இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.  இருந்தாலும் சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படம் தான் ,

விஜயகாந்தை பெரிய அளவில் பிரபலமாக்கியது . பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து நூறாவது நாள் ,வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, கூலிக்காரன் , செந்தூரப்பூவே ,புலன் விசாரணை,  கேப்டன் பிரபாகரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ,

ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் விஜயகாந்த் . குறிப்பாக தமிழ் ரசிகர்கள் இவரை கேப்டன் என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.  இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்த விஜயகாந்த் அரசியலிலும் ஒரு கை பார்த்தார்.  ஆனால் இவருடைய கெட்ட நேரமோ என்னமோ,

தற்போது இவரால் எழுந்து கூட நடக்க முடியாத அளவிற்கு இருக்கிறார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது . அப்படி இருந்தும் கேப்டன் வெளியில் தலை காட்ட மாட்டாரா என்று இப்போதும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  இந்நிலையில்,

கூலிங் கிளாஸ் உடன் கார் முன்பு மாஸாக போஸ் கொடுத்த விஜய்காந்தின் புகைப்படம் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது. இது இப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை என்றாலும் தற்போது அந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *