April 28, 2024

தமிழ் நாட்டுல நடிகைகளே இல்லையா ..?? விஜய்க்கு ஜோடியாகும் “அக்கட தேசத்து” நடிகை ..!! பொறாமையில் பொங்கும் தமிழ் நடிகைகள் ..!!

தற்போது விஜய் ரசிகர்கள் லியோ படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் . இந்தத் திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.  இதை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் . ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் . மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு,

இந்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது . மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் பிரியங்கா மோகன் இரண்டு நடிகைகளையும் நடிக்க வைக்கலாம் என்று பேச்சு வார்த்தை நடந்து வந்தது .  ஆனால் தற்போது ஜோதிகாவும் இல்லை,

பிரியங்காவும் இல்லையாம்,  26 வயது நடிகைக்கு வாய்ப்பு போய் உள்ளது . அவர் வேறு யாரும் இல்லை நடிகை மீனாட்சி சவுத்ரி தான் . இந்தி படத்தின் மூலம் திரை பயணத்தை தொடங்கிய மீனாட்சி சவுத்ரி தொடர்ந்து தெலுங்கு படங்களில் கலக்கி கொண்டு வந்தார் .

மேலும் சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை மீனாட்சி சவுத்ரி . இதைஅடுத்து ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்து வருகிறார் . இதைத்தொடர்ந்து,

அடுத்ததாக தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இதைப் பார்த்த தமிழ் நடிகைகள் எங்களுக்கே  கிடைக்காத வாய்ப்பு அவருக்கு கிடைத்துவிட்டதே என்று புலம்பி வருகிறார்களாம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *