May 1, 2024

மேல கை வச்சா சும்மா விடுவனா ..?? தனுஷ் ரசிகருக்கு தர்ம அடி கொடுத்த நடிகை ..!! தீயாய் பரவும் வீடியோ உள்ளே ..!!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி  உள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர் . இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து சிவராஜ்குமார் , சந்திப் கிசன் ,பிரியங்கா மோகன் ,ஜான் கொக்கன் ,நிவேதிதா ,வினோத் கிசன், நாசர், இளங்கோ குமரவேல் ,விஜி சந்திரசேகர் , பால சரவணன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது . அந்த நிகழ்ச்சியில் கேப்டன் மில்லர் பட குழுவினர்,

அனைவரும் கலந்து கொண்டனர் . குறிப்பாக இந்த படத்தில் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் . அப்போது தனுஷை பார்ப்பதற்காக ரசிகர்கள் அலைமோதிய,

போது கூட்டத்தில் ஒருவர் ஐஸ்வர்யாவிடம் அத்து மீறி உள்ளார்.  இதனால் கடுப்பான ஐஸ்வர்யா அந்த நபரை கையும் களவுமாக பிடித்து தர்மஅடி கொடுத்தது மட்டுமில்லாமல், அவரை காலில் விழ வைத்திருக்கிறார் . அதன் பிறகு காலில் விழுந்த அந்த நபர் அங்கிருந்து செல்ல முயன்ற போது,

 

ஓட ஓட விரட்டி அடித்திருக்கிறார் ஐஸ்வர்யா . அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . அது மட்டுமல்லாமல் இதற்கு முன்பு விழா மேடை ஒன்றில் கூல் சுரேஷ் இவருக்கு மாலை போட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *