May 3, 2024

நன்றி மறந்த விஜய் , அஜித் ..!! இயக்குனர் ஏ ஆர் முருகதாஸை தூக்கிவிட வரும் மாஸ் நடிகர் ..!! ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் ..!!

ஏ ஆர் முருகதாஸ் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஏ ஆர் முருகதாஸ் கடந்த 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்த ஏ ஆர் முருகதாஸ் தொடர்ந்து ,

விஜயகாந்தை வைத்து ரமணா, சூர்யாவை  கஜினி , ஏழாம் அறிவு , விஜய்யை வைத்து துப்பாக்கி , கத்தி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.  ஆனால் இதன் பிறகு இவர் இயக்கிய சர்கார் மற்றும் தர்பார் போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இந்தப் படங்களின் தோல்வியால் இவருக்கு யாருமே பட வாய்ப்பு தரவில்லை . குறிப்பாக விஜய்அஜித்துக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் . அப்படி இருந்தும் கூட இவரை விஜய் அஜித் கைவிட்டு உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில்,

மாஸ் நடிகருடன் கூட்டணி அமைக்க உள்ளாராம் இயக்குனர்  ஏ ஆர் முருகதாஸ்.  அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சிவகார்த்திகேயன் தான்.  இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஏ ஆர் முருகதாஸுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமல்லாமல் உங்களுடைய 23 வது படத்தில்,

நடிக்கவுள்ளது மிக்க மகிழ்ச்சி என்று பதிவு போட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *