April 22, 2024

அடையாளம் தெரியாத அளவிற்கு அருண் விஜய்யை மாற்றிய பாலா..!! வெளியானது வணங்கான் படத்தின் புகைப்படங்கள் ..!!

கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில்  தொடங்கப்பட்ட திரைப்படம் தான் வணங்கான் . இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பல பிரபலங்கள் நடிக்க இருந்தனர்.  ஆனால் பாதி படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யாவுக்கும், பாலாவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் இந்த படம் பாதியிலேயே கைவிட்டதாக தகவல் வெளியானது . இதன் பிறகு சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யை வைத்து,

வணங்கான் படத்தை எடுத்து முடித்தார் இயக்குனர் பாலா . இந்தப் படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், மிஸ்கின், சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படி இருக்கும் நிலையில் சூர்யா தவறவிட்ட வணங்கான் படத்தில் நடித்திருந்த   நடிகர் அருண் விஜய்யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இதில் ஆளே அடையாளம் தெரியாது அளவிற்கு இருக்கிறார் நடிகர் அருண் விஜய் . இன்னும் சொல்லப்போனால் ,

அருண் விஜய் பார்ப்பதற்கு அப்படியே பிதாமகன் விக்ரம் போலவே இருக்கிறார் . இதனால் கண்டிப்பாக இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது . இதோ அவரின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *