April 28, 2024

வெறும் 50 வினாடி விளம்பரத்தில் நடிப்பதற்கு ..!! இத்தனை கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா ..?? மார்க்கெட் இருக்குன்னு ஓவரா ஆடாதீங்க

தமிழ் சினிமா ரசிகர்களால்   லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய  நடிகை நயன்தாரா சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் ,

கவர்ந்து விட்டார் நடிகை நயன்தாரா . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவை கலக்கி வந்த முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகை நயன்தாரா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,

கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் கலக்கிக் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அது மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலேயே 10 கோடி சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும்தான்.  இப்படி சினிமாவில் பல கோடிகளை கல்லாகட்டி வரும்,

நயன்தாரா விளம்பரத்தில் நடித்தும் கோடிகளை குவித்து வருகிறார்.  அந்த வகையில் வெறும் ஐம்பது வினாடி ஓடும் விளம்பரத்தில் நடிப்பதற்காக 5 கோடி சம்பளம் கேட்டாராம் நடிகை நயன்தாரா . இதைப் பார்த்த ரசிகர்கள் வெறும் ஒரு நிமிஷத்துக்கு இத்தனை கோடி சம்பளமா .?

மார்க்கெட் இருக்குன்னு ஓவரா ஆடாதீங்க என்று கூறிவருகின்றனர் . இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *