April 28, 2024

என்னை “அந்த மாதிரி” மாற்றிவிட்டார்கள் ..!! அதனால் தான் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல ..!! 44 வயதில் ஓப்பனாக சொல்லிய நடிகை சோனா ..!!

சோனா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சோனா . பின்னர் ஒரு கட்டத்தில் கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படி வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டு வந்த நடிகை சோனா சின்னத்திரையில் ஒளிப்பரப்பான அபி டெய்லர், ரோஜா,  மாரி போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி இருக்கும் நிலையில் 44 வயதாகியும் கூட  இவருக்கு இன்னும் திருமணம்,

நடக்கவில்லையாம் . அதற்கான காரணத்தை தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை சோனா.  அந்த வகையில் அவர் கூறியதாவது,  சினிமாவில் என்னை கவர்ச்சி நடிகை என்று அடையாளப்படுத்தி விட்டார்கள்.  இதனால் கவர்ச்சி நடிகை என்றாலே அப்படித்தான் இருப்பாள்,

என்று முத்திரை குத்தி விட்டார்கள் . ஆனால் நானும் ஒரு சாதாரண பெண்தான்.  எனக்கும் வீட்டு வேலை , சமையல் போன்ற அனைத்தும் தெரியும் . அப்படி இருந்தும் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.  அதற்கு முக்கிய காரணமே கவர்ச்சி நடிகை என்ற பெயர்தான் . இந்த பெயரை,

எப்படியாவது மாற்றி விட வேண்டும் என்று சீரியல்களில் கூட அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன் . அப்போதும் கூட அந்தப் பெயர் மறையவில்லை என்று வருத்தத்துடன் கூறியிருந்தார் நடிகை சோனா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *