May 2, 2024

சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த ” கார்த்திகை தீபம் ” ஹர்த்திகா..!! வைரலாகும் திருமண புகைப்படங்கள் ..!! வாழ்த்து மழையில் ரசிகர்கள் ..!!

சமீப காலமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களும் டிஆர்பி யில் சக்கை போடு போட்டு வருகிறது . அந்த வகையில் பல சீரியல்களை கூறலாம் .  அந்த வரிசையில் ஒரு சீரியல் தான் கார்த்திகை தீபம் . கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான கார்த்திக் ராஜ் ஹீரோவாகவும்,  ஹர்த்திகா ஹீரோயின் ஆகவும் நடித்திருந்தனர் .

இவர்களோடு இணைந்து ராஜேஷ் ,தமிழ்ச்செல்வி, மீரா கிருஷ்ணா, விசித்ரா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த சீரியல் ஒளிபரப்பானதிலிருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . குறிப்பாக இந்த சீரியல் மூலம் தமிழ் மக்கள் மனதை கவர்ந்தவர் தான்,

நடிகை ஹர்த்திகா. தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் ஹர்த்திகா. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கேரளாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார் ஹர்த்திகா . அந்தப் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப்,

பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை  ஹர்த்திகா.  தற்போது அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் கார்த்திகை தீபம் ஹர்த்திகாவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *