April 29, 2024

விஜயகாந்தை தேடிச்சென்ற சூப்பர் ஸ்டார் பட்டம் ..!! அதற்கு கேப்டன் என்ன சொன்னார் தெரியுமா ..?? கேட்டாலே புல்லரிக்குது ..!!

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்.  கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய பட்டத்தை தக்க வைத்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . ஆனால் அவருடைய பட்டத்தை பறிப்பதற்கு பல நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர் .  ஆனால் சில வருடங்களுக்கு முன்பு விஜயகாந்தை தேடிச் சென்று இருக்கிறதாம்  சூப்பர் ஸ்டார் பட்டம்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டாருக்கு பிறகு நடிக்க வந்தவர் தான் நடிகர்  விஜயகாந்த் . ஆனால் அப்போது சூப்பர் ஸ்டாருக்கு இணையாக கொடிகட்டி பறந்து வந்தார் விஜயகாந்த் .  பின்னர் ஒரு கட்டத்தில் ரஜினி நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தொடர் தோல்வியை சந்தித்ததாம்.

அந்த நேரத்தில் விஜயகாந்த் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்ததாம் . இதனால் அப்போது பத்திரிகைகளில் விஜயகாந்த் தான் சூப்பர் ஸ்டார் என்று எழுதத் தொடங்கி விட்டார்களாம் . இது குறித்து அப்போது விஜயகாந்திடம் கேட்டபோது எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மீது,

எல்லாம் நம்பிக்கை கிடையாது , நான் மக்களுக்கு பிடிக்கும் ஒரு நல்ல நடிகராகவே இருக்க விரும்புகிறேன் என்று கூறி அந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து விட்டாராம்  விஜயகாந்த் அவர்கள் . இதன் பிறகு தான் விஜயகாந்தின் நூறாவது படமான ,

கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பிறகு கேப்டன் என்று தமிழ்  ரசிகர்களால்   கொண்டாடப்பட்டு வருகிறார் விஜயகாந்த் அவர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *