April 28, 2024

வேட்டையனுக்கு கிள்ளிக்கொடுத்து விட்டு ..!! சந்திரமுகிக்கு மட்டும் அள்ளிக்கொடுத்த தயாரிப்பாளர் ..!! ஸ்பெஷல் கவனிப்புக்கு இப்படியொரு காரணமா ..??

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி 2 . கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டரான  படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த சந்திரமுகி 2 . இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து கங்கனா  ரனாவத், வடிவேலு ,ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன் ,

மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே ,ரவி மரியா, மனோபாலா போன்ற பல நடிகர்,  நடிகைகள் நடித்துள்ளனர் . லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஆஸ்கர் வென்ற  எம் எம் கீரவாணி இசையமைத்திருந்தார்.  மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் ,

கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருந்தது . பின்னர் ஒரு சில காரணங்களால் தள்ளிப்போன சந்திரமுகி 2 திரைப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது . இதனால் வரும் நாட்கள் எல்லாம் விடுமுறை நாட்கள் என்பதால் கண்டிப்பாக இந்த படம் ,

வசூல் சாதனை செய்யும் என்று கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  அந்த வகையில் சந்திரமுகி 2 படத்திற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் 15 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம் .

ஆனால் இந்த படத்தில் சந்திரமுகியாக நடித்த கங்கனாவிற்கு 20 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.  காரணம் இவர் பாலிவுட் நடிகை என்பதாலும் , இந்த படத்தில் இவருக்கு அதிக ஸ்கோப் இருந்ததாலும் இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *