May 7, 2024

எனக்கு எல்லாமே விஜய் தான் ..!! தியேட்டரிலேயே காதலியை கரம்பிடித்த விஜய் ரசிகர் ..!! லியோ படத்தின் முதல் காட்சியில் நடந்த நெகிழ்ச்சி தருணம் ..!!

விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த லியோ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுக்க வெளியாகி உள்ளது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவான இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் . இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா ,கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ,பிரியா ஆனந்த் ,

சாண்டி மாஸ்டர் , மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . எஸ் எஸ் லலித்குமார் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  இன்று வெளியான இந்த திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது .  இருந்தாலும் இந்த திரைப்படம் வசூலில் பிரம்மாண்ட சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் காட்சியின் போது ஒரு நிகழ்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது .

அந்த வகையில் புதுக்கோட்டையை சேர்ந்த விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தியேட்டரிலேயே தன்னுடைய நிச்சயதார்த்தத்தை நடத்தி இருக்கிறார் . அந்த வகையில் தனக்கு அப்பா , அம்மா இல்லை என்றும் தனக்கு எல்லாமே விஜய் தான் என்றும் அதனால் அவருடைய படம் வெளியான,

நாளிலேயே நிச்சயம் செய்து கொண்டேன் என்றும் கூறியிருந்தார் நடிகர்  விஜய்யின் தீவிர ரசிகர்.  தற்போது அந்த புகைப்படம் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.மேலும் தியேட்டரில் இருந்த ரசிகர்கள் இந்த ஜோடியை வாழ்த்தியுள்ளனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *