April 29, 2024

சாதாரண பெண் டு லேடி சூப்பர் ஸ்டார் ..!! சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நயன்தாரா எப்படி இருக்கிறார் பாருங்க ..!!

நயன்தாரா ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.  மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரையை பயணத்தை தொடங்கிய நயன்தாரா கடந்த 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த நடிகை  நயன்தாரா தொடர்ந்து சந்திரமுகி ,கஜினி ,பில்லா ,

யாரடி நீ மோகினி, ஆதவன் ,பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . அதோடு தமிழ் சினிமாவை கலக்கிவந்த ரஜினி, விஜய் ,அஜித், சூர்யா, விக்ரம் ,தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து,

பிரபலமானார் நடிகை நயன்தாரா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே கடந்த வருடம்  விக்னேஷ் சிவனே கரம் பிடித்த நயன்தாரா,

திருமணத்துக்கு பிறகும் பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.  இந்நிலையில் நடிகை நயன்தாரா சினிமாவிற்கு வருவதற்கு முன்பு எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *