April 28, 2024

போன மாசம் மகனுக்கு நிச்சயதார்த்தம் ..!! இந்த மாசம் மகளுக்கு ..!! களைக்கட்டும் நடிகர் ஜெயராமின் வீட்டு விஷேச புகைப்படங்கள் ..!!

ஜெயராம் ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் ஆவார் . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய ஜெயராம் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான கோகுலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் . இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து புருஷா லட்சணம் ,முறைமாமன் ,

பெரிய இடத்து மாப்பிள்ளை ,தெனாலி ,பஞ்சதந்திரம், ஜூலி கணபதி, பரமசிவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து அசத்தியிருந்தார் நடிகர் ஜெயராம் . தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 என்ற படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார்.

மேலும் இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் . இதனிடையே பார்வதி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஜெயராமுக்கு காளிதாஸ் என்ற மகனும்,  மாளவிகா என்ற மகளும் உள்ளனர். இதில் ஜெயராமின் மகனான காளிதாஸ்,

நடிகராக இருந்து வருகிறார்.  இப்படி இருக்கும் நிலையில் கடந்த மாதம் தான் ஜெயராமின் மகனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது .இந்நிலையில் நேற்று ஜெயராமின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது.  இதோ ஜெயராமின் மகன் மகளின் நிச்சயதார்த்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *