April 29, 2024

கார் கொடுக்கும் கலாசாரத்தை கொண்டு வந்ததே ..!! இந்த தமிழ் நடிகர் தானா ..?? இவருக்கு பிறகு தான் ரஜினி ,கமல் எல்லாம் ..!!

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு படம் சூப்பர் ஹிட் அடித்து விட்டால் அந்தப் படத்தின் இயக்குனருக்கு கார் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் தயாரிப்பாளர்கள் . அப்படி கடந்த வருடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் விக்ரம் . இந்த திரைப்படம் 500 கோடி வசூலை குவித்தது .

இதற்காக விலை உயர்ந்த சொகுசு காரை லோகேஷ்க்கு பரிசாக கொடுத்திருந்தார் கமல்ஹாசன்.  இவரைத் தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை ஒட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் , இயக்குனர் நெல்சனுக்கும் விலை உயர்ந்த சொகுசு காரை பரிசாக,

கொடுத்திருக்கிறார் சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன்.  ஆனால் இப்படி இயக்குனர்களுக்கு கார் கொடுக்கும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே இந்த தமிழ் நடிகர் தானாம்.  அவர் வேறு யாரும் இல்லை நடிகர் அஜித் தான் . ஆரம்ப காலகட்டங்களில் நடிகர் அஜித் தொடர்ந்து,

புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார் . அப்படி அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இயக்குனர்கள் அஜித்துக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தனர் . அதற்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக புதிய காரை பரிசாக கொடுப்பாராம் அஜித் . அந்த வகையில்,

வாலி படம் ஹிட்டான போது எஸ் ஜே சூர்யா ,முகவரி படம் ஹிட்டான போது இயக்குனர் துரை, சிட்டிசன் ஹிட் டான போது இயக்குனர் சரவணா சுப்பையா,  அமர்க்களம்  ஹிட்டான போது இயக்குனர் சரண் என்று பல இயக்குனர்களுக்கு காரை பரிசாக கொடுத்திருக்கிறாராம்  நடிகர் அஜித்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *