May 6, 2024

படப்பிடிப்பில் இப்படியொரு டார்ச்சர் நடந்ததா..?? உண்மையை கூறிய ” திருச்சிற்றம்பலம் ” தாய்க்கிழவி ..!! காட்டுத்தீ போல பரவும் தகவல் ..!!

நித்யா மேனன் ஒரு பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார்.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்த நடிகை நித்யா மேனன் கடந்த 2011 ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான 180 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, காஞ்சனா 2 , 24 ,இருமுகன் ,

மெர்சல் , ஓ காதல் கண்மணி  போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார் .  குறிப்பாக கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவர்ந்திருந்தார் நடிகை நித்யா மேனன்.

மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் , ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி பல மொழி படங்களில் கலக்கி கொண்டு வந்த நடிகை நித்யா மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ,  அந்த தமிழ் நடிகர்  படப்பிடிப்பில் எனக்கு டார்ச்சர்,

கொடுத்தார் என்று கூறியதாக இணையத்தில் தகவல்கள் பரவியது . இப்படி இருக்கும் நிலையில் அந்த பதிவை பார்த்த நடிகை  நித்யா மேனன் இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் ,  நான் எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை , தேவையில்லாமல் வதந்தியை கிளப்பாதீர்கள் ,

என்று தீயாய் பரவிய  சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் . இதைப் பார்த்த ரசிகர்கள் செவனேனு இருந்த நடிகையை இப்படி கோபத்திற்கு ஆளாக்கி விட்டார்களே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *