April 29, 2024

திறந்த கதவு தானே ..!! யாரு வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ..!! விஜய்யின் அரசியில் வருகை ..!! பளிச்சென்று பதிலளித்த வடிவேலு ..!!

விஜய் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.  இதுவரை இவர் 67 படங்களுக்கு மேல் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் . இதை அடுத்து தற்போது இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் இயக்க உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து முடித்து விட்டார் விஜய் . இதைத்தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள ,

தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய்.  தற்போது நடிகர் விஜய்  சினிமாவை தாண்டி அரசியலையும் ஒரு கை பார்க்க போவதாக தகவல் வெளியானது . இதனால் அதற்காக தன்னுடைய ரசிகர்களை இப்போது தயார் செய்து வருகிறார் நடிகர் விஜய் .

மேலும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை பலரும் எதிர்பார்க்கிறார்கள் . ஆனால் ஒரு சிலர் விஜய்யின் அரசியல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் . இப்படி இருக்கும் நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில்  காமெடி நடிகர் ,

வடிவேலுவிடம் கேள்வி எழுப்பி உள்ளனர் செய்தியாளர்கள் . அதற்கு பதில் அளித்த வடிவேலு  கூறியதாவது ,  எல்லோருமே அரசியலுக்கு வரலாம் . அவர் வந்துட்டு போட்டும் . நல்லா திறந்த கதவு தானே யார் வேண்டுமானாலும் வரலாம்,  இவர் வரட்டும் நீங்களும் வாங்க என்று,

எப்போதும் போல அவருடைய  காமெடியான பேச்சால் பதிலளித்து இருந்தார் நடிகர் வடிவேலு. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *