April 25, 2024

அம்மாவின் கல்லறையை குட்டி தாஜ்மஹால் போல கட்டிய ஏ ஆர் ரகுமான்..!! அம்மானா அவ்ளோ புடிக்குமா ..?? வெளிவந்த புகைப்படங்கள் ..!!

ஏ ஆர் ரகுமான் ஒரு தவிர்க்க முடியாத இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார் . ஆரம்பத்தில் இளையராஜாவிடம் பணிபுரிந்து வந்த ஏ ஆர் ரகுமான் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா என்ற படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே தேசிய விருது உட்படப் பல விருதுகளை குவித்தார் ஏ ஆர் ரகுமான்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜென்டில்மேன்,

கிழக்குச் சீமையிலே, காதலன் ,பம்பாய், முத்து, இந்தியன் ,காதல் தேசம், மின்சார கனவு போன்ற சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் ஏ ஆர் ரகுமான் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,

மலையாளம்,  ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் பிறப்பால் ஹிந்துவாக பிறந்த ஏ ஆர் ரகுமான் தந்தை இறந்த பிறகு முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்டார் . மேலும் ஏ ஆர் ரகுமானின் அம்மா பெயர் கஸ்தூரி என்கிற,

கரீமா.  இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார் . மேலும் சிறுவயதிலிருந்தே அம்மாவின் வளர்ப்பில் வளர்ந்ததால் அம்மாவின் மீது ஏ ஆர் ரகுமானுக்கு ஒரு தனி பாசம் இருந்திருக்கிறது . இதனாலேயே அவருடைய கல்லறையை தற்போது,

சின்ன தாஜ்மஹால் போல கட்டி இருக்கிறார் ஏ ஆர் ரகுமான் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *