April 25, 2024

300 கோடி பட்ஜெட் ..!! கர்ணனாக நடிக்கும் சியான் விக்ரம் ..!! வெளியான வீடியோவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் அப்படியே வாழ்ந்து காட்டுபவர் நடிகர் விக்ரம் . அந்த அளவிற்கு தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் உடம்பை ஏற்றுவது , இறக்குவது என்று டெடிகேஷனோடு செய்து வருகிறார் நடிகர் விக்ரம்.  மேலும் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் அடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும்,

கவர்ந்திருந்தார் நடிகர் விக்ரம் . இதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற வரலாற்று படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் தற்போது இன்னொரு வரலாற்று படம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம் ,

நடிகர் விக்ரம் . அந்த வகையில் பிரபல மலையாள பட இயக்குனரான இயக்குனர் ஆர் எஸ் விமல் இயக்கத்தில் உருவாகும் கர்ணா என்ற படத்தில் நடிக்க இருக்கிறாராம் நடிகர் விக்ரம் . மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும்,

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது . கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்திருக்கிறது . ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதி கூட இன்னும் முடியாத நிலையில்,

விக்ரமுக்கே சொல்லாமல் இந்த படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  இதனால் விரைவில் இந்த படம் மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.  இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *