April 27, 2024

19 வருடங்கள் கழித்து..!! மீண்டும் சந்தித்து கொண்ட ” 7 ஜி ரெயின்போ காலனி ” கதிர் – அனிதா ..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் 7 ஜி ரெயின்போ காலனி . இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் ரவி கிருஷ்ணா . இந்தப் படத்தில் ரவிகிருஷ்ணா உடன் இணைந்து சோனியா அகர்வால்,  சுமன் செட்டி, விஜயன் ,சுதா , மனோரமா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் . இப்படி வெளியான திரைப்படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது . குறிப்பாக இந்தப் படத்தின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவும் ஒரு முக்கிய காரணம் ஆவார் . அந்த அளவிற்கு தன்னுடைய,

இசையால் படத்தை மெருகேற்றி இருந்தார் யுவன் சங்கர் ராஜா . மேலும் இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஆகியும் கூட இன்னும் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .ஆனால்  இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த ரவி கிருஷ்ணா இதன் பிறகு ,

பெரிய அளவில் பேசப்படவில்லை . இவரை போல சோனியா அகர்வாலும்  ஒரு சில படங்களில் நடித்து காணாமல் போனார் . தற்போது ஒரு படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகி 19 வருடங்கள் ஆன நிலையில் ரவி கிருஷ்ணாவும்,

சோனியா அகர்வாலும் நேரில் சந்தித்து இருக்கின்ற னர் . அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் ஒரு வழியாக கதிரும்,  அனிதாவும்  சேர்ந்து விட்டார்கள் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *