May 8, 2024

100 கோடி சம்பளம் வாங்குவதற்காக..!! விஜய் செய்த கோக்குமாக்கு வேலை ..!! உண்மையை புட்டு புட்டு வைத்த பிரபல நடிகர் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ரஜினிக்கும் , விஜய்க்கும் தான் பெரிய அளவில் போட்டி நிலவி வருகிறது . இதில் யார் நம்பர் ஒன் என்று அவர்களுடைய ரசிகர்களே மாறி மாறி போட்டி போட்டு வருகின்றனர் . மேலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை வசூலிலும் சரி ,சம்பளத்திலும் சரி சூப்பர் ஸ்டார் தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தார் . தற்போது அவருக்கு இணையாக விஜயின் படங்களும் வசூல் செய்து வருகிறது.

அது மட்டுமல்லாமல் சம்பளத்தையும் ரஜினிக்கு இணையாக வாங்கி வருகிறார் நடிகர் விஜய்.  அப்படி 30 கோடி,  40 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த விஜய் திடீரென 100 கோடி சம்பளம் வாங்குவதற்காக செய்த கோக்குமாக்கு வேலைகளை புட்டு புட்டு வைத்துள்ளார் பிரபல நடிகர் ஒருவர் .

அவர் வேறு யாருமில்லை நடிகர் மீசை ராஜேந்திரன் தான் . அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் புலி.  இந்த திரைப் படத்தை விஜய்க்கு நெருக்கமாக இருந்த செல்வகுமார் என்பவர் தயாரித்திருந்தார்.  இந்த படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை திடீரென  50 கோடிக்கு ,

மேல் உயர்த்தினாராம்  நடிகர் விஜய் . இதன் பிறகு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை தயாரித்தவர் அவருடைய மாமாவான சேவியர் பிரிட்டோ.  இந்தப் படத்திலிருந்து 100 கோடியாக சம்பளத்தை  உயர்த்தியதாக கூறப்படுகிறது . இப்படி தனக்கு தெரிந்தவர்களை வைத்து,

படம் எடுத்து அதன் மூலம் தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்திக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்.  இதை அடுத்து தளபதி 68 படத்திற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *