May 3, 2024

அ ந்த கால த்தி லேயே 300 கோ டி வசூ ல் செய் த எம் ஜி ஆ ரின் ப டம் ..!! ரஜி னி , விஜ ய்க்கெ ல்லாம் இ வர் தா ன் முன் னோடி ..!! எந் த பட ம் தெ ரி யுமா ..??

தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டாலே பெரிய சாதனை என்று பேசிக்கொண்டு வருகின்றனர் .  அது மட்டுமல்லாமல் ரஜினி ,கமல் ,விஜய் , அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் 300,  400 கோடி வசூல் செய்து சாதனை படைக்க வருகிறது . ஆனால் அந்தக் காலத்தில் எம்ஜிஆர் நடித்த ஒரு திரைப்படம் 300 கோடி வசூல் செய்திருக்கிறதாம் .

அந்த வகையில் சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் அறிமுகமான எம்.ஜி.ஆர் குறிப்பிட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வந்தார் . இப்படி முன்னணி நடிகராக கலக்கி கொண்டு வந்த எம்ஜிஆர் ஒரு சில தர படங்களை தயாரித்தும் இருந்தார் . அப்படி இவர் தயாரித்த,

சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றுதான் கடந்த 1969 ஆம் ஆண்டு வெளியான அடிமைப்பெண் திரைப்படம் . இயக்குனர் கே சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, அசோகன் ,மனோகர், சந்திரபாபு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படி வெளியான,

திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் 175 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது.  அப்படி 50 லட்சம் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் வரை வசூல் செய்து சாதனை படைத்ததாம்.  அப்படி அன்று இந்த படம் செய்த வசூல் ,

இன்றைய மதிப்பின் படி பார்த்தால் 300 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அப்போது டிக்கெட்டில் விலை வெறும் 30 பைசாவிலிருந்து ஒரு ரூபாய் வரை மட்டும்தான் இருந்தது.  அப்படி இருந்த காலத்திலேயே இவ்வளவு வசூல் செய்தது சாதாரணம் கிடையாது என்று பேசப்படுகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *