April 29, 2024

மா ரி செல் வராஜ்க் கு எத ற்கு கா ர் ..?? உதய நிதி இதை தா ன் பண்ணி ருக்கணு ம் ..?? திடீ ரென கொந் தளிக் கும் பயி ல்வான் ரங் கநா தன் ..!! என் ன கார ணம் தெ ரியு மா ..??

மாரி செல்வராஜ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் . பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த மாரி செல்வராஜ் தன்னுடைய இரண்டாவது படத்திலேயே தனுஷுடன் கூட்டணி அமைத்தார் .அப்படி இவர்களின் கூட்டணியில் வெளியான கர்ணன் திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது.  இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை,

வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.  கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது.  அதோடு இந்த திரைப்படம் தற்போது வரை 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  மேலும் தன்னுடைய கடைசி,

படத்தை வெற்றி படமாக ஆக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு  நன்றி தெரிவிக்கும் வகையில் 50 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார் உதயநிதி ஸ்டாலின் . இப்படி இருக்கும் நிலையில் எப்போதும் சர்ச்சையாக பேசி வரும் பயில்வான் மாரி செல்வராஜ் க்கு எதற்கு கார் என்று,

பரபரப்பை கிளப்பியுள்ளார்.  அந்த வகையில் அவர் கூறியதாவது , மாமன்னன் படத்தை இயக்கியதற்காக மாரி செல்வராஜ் க்கு 5 கோடி சம்பளம் கொடுத்து இருக்கிறார்கள் . அவர் அந்த பணத்தில் கூட கார் வாங்கி கொள்ளலாம் . அப்படி இருந்தும் எதற்கு உதயநிதி இத்தனை லட்சத்தில் ,

அவருக்கு கார் வாங்கி கொடுத்தார் . குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் ஒரு விளையாட்டு துறை அமைச்சர் ஆவார்.  அந்த பணத்தில் அவர் கஷ்டப்படும் விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்திருந்தால் ஒரு புண்ணியமாக இருந்திருக்கும் என்று கூறியிருந்தார் பயில்வான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *