April 27, 2024

அஜித்துடன் மோத தில் இருக்கா ..?? WWE மல்யுத்த வீரராக மாறிய அஜித் ..!! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலைக்கு வரும் டாப் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார் . தமிழ் சினிமாவிலேயே இவர் மட்டும்தான் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்து வருகிறார்.  மேலும் வருடத்திற்கு ஒரு படம் என்ற கணக்கில் நடித்து வரும் அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் .

இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து கொண்டு வருகிறது.  இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா ,ரெஜினா, பிரியா பவானி சங்கர் , ஆரவ் போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத்,

இசையமைக்க உள்ளார் . மேலும் இந்த படத்திற்காக அஜித் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் ஏ ஐ என்ற தொழில்நுட்பம் வந்ததிலிருந்து நாம் பார்க்காத விஷயங்களையும் நெட்டிசன்கள் நமக்கு காண்பித்து வருகிறார்கள் .

அந்த வகையில் நடிகர் அஜித் wwe மல்யுத்த வீரராக மாறி இருக்கிறார் . அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.  குறிப்பாக அஜித் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *