April 28, 2024

அந்த நடிகர் எனக்கு அப்பா மாதிரி ..!! இனிமேல் இப்படி எல்லாம் பேசாதீங்க ..!! இரண்டாம் திருமணம் குறித்து பேசிய நடிகை மீனா ..!!

தமிழ் சினிமா உலகை பொறுத்தவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் தவிர்க்க முடியாத கதாநாயகியாக இருந்து வந்தவர்கள் ஒரு சிலர் மட்டும்தான் .  அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை மீனா . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்த மீனா என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எஜமான் ,சேதுபதி ஐபிஎஸ் ,நாட்டாமை ,முத்து,

அவ்வை சண்முகி ,பாரதி கண்ணம்மா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை மீனா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

இப்படி தவிர்க்க முடியாத நடிகை கொண்டு வந்த மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.  இந்நிலையில் கடந்த வருடம் மீனாவின் கணவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த மீனா பழையபடி படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.  இப்படி இருக்கும் நிலையில் நடிகை மீனா தனுஷை  இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று இணையத்தில் தகவல்கள் வெளியானது.  இது குறித்து பேசிய ,

நடிகை மீனா ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு அப்பா மாதிரி . அப்படி இருக்கும்போது அவருடைய மருமகனை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பது எல்லாம் கட்டுக்கதை.  இனிமேல் இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்று கூறியிருந்தார் நடிகை மீனா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *