May 7, 2024

500 கோ டியை குவி த்த ஜெ யி லர் ..!! நெல் சனு க்கு கா ரை ப ரிசாக கொ டுக் கும் கலா நிதி மா றன் ..!! விலை யை கேட் டாலே த லை சுத் து தே ..!!

கடந்த சில வருடங்களாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான  திரைப்படங்கள் மோசமான வரவேற்பையே பெற்று இருந்தது . இதனால் ஜெயிலர் திரைப்படத்தை மலை போல் நம்பி இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . அப்படி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,சிவராஜ்குமார் ,மோகன்லால் ,விநாயகன், ஜாக்கி ஷரப், வசந்த ரவி ,ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன்,யோகி பாபு ,

போன்ற பல பிரபலங்களின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. மேலும் பல வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு சூப்பர் ஸ்டாரின் படம் வெளியானதால் அவருடைய ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.  குறிப்பாக இந்த திரைப்படம் 14 நாட்களில் 540 கோடி வசூல் செய்து,

சாதனை படைத்துள்ளது.  இனி வரும் நாட்களிலும் இந்த திரைப்படம் நல்ல  வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது .அதுவும் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறது ஜெயிலர் திரைப்படம் .  இப்படி சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய வசூலை பெற்று தந்த ,

இயக்குனர் நெல்சனுக்கு கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் வாங்கி கொடுத்தது போல கலாநிதி மாறனும் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக கொடுக்க உள்ளாராம்.அந்த வகையில் இயக்குனர் நெல்சனுக்கு rolls-royce கார் ஒன்றை பரிசாக கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் இந்த காரின் ஆரம்ப விலையே ஐந்து கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது . இருந்தாலும் 500 கோடி வசூல் என்றால் சாதாரண விஷயமா.? அதனால் கண்டிப்பாக இந்த காரை தான் கொடுப்பார் என்று கூறப்படுகிறது . ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *