April 27, 2024

இந்தியாவை விடுங்க ..!! ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறப்போகும் சூப்பர் ஸ்டார் ..!! அடேங்கப்பா , அடுத்த படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா ..??

சமீப காலமாக படத்தின் பட்ஜெட்டை விட சினிமா நடிகர்கள் வாங்கும் சம்பளம் தான் அதிகமாக இருந்து வருகிறது.  இதனால் சமீப காலமாக வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் சொதப்பலில் தான் முடிகிறது . இப்படி இருக்கும் நிலையில் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாற இருக்கிறார் ரஜினிகாந்த் . அந்த வகையில் கிட்டத்தட்ட 72 வயதிலும் கூட தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக ,

கலக்கி கொண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . அது மட்டுமல்லாமல் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இதை அடுத்து ஜெய் பீம் பட இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்கத்தில்,

உருவாகி வரும் தலைவர் 170 என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் ரஜினி.  இந்த படத்தை முடித்த கையோடு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தலைவர் 171 என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த் . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக ,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பேசப்பட்ட சம்பளம் தான் தற்போது அனைவரையும் ஆச்சிரியப்பட வைத்துள்ளது . அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு 260 முதல் 250 கோடி வரை சம்பளமாக வாங்க இருக்கிறாராம் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் அவர்கள் .

அப்படி பார்த்தால் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சூப்பர் ஸ்டார் மாறிவிடுவார் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *