May 3, 2024

ஜவான் படம் இந்த விஜயகாந்த் படத்தின் காப்பியா ..?? மீண்டும் கைவரிசையை காட்டிய அட்லீ ..!! எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார் போல ..!!

இயக்குனர் அட்லீ  இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் தான் ஜவான்.  இந்த படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா ,விஜய் சேதுபதி ,தீபிகா படுகோன் ,பிரியாமணி, சானியா மல்கோத்ரா ,யோகி பாபு போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.  ஷாருக்கான் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.  இன்று வெளியான திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத,

அளவிற்கு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது .  இதனால் இந்த திரைப்படம் கண்டிப்பாக 1000 கோடியை தொட்டு விடும் என்று கூறப்படு கிறது .  ஆனால் தமிழ் சினிமாவில் காப்பியடித்து மாட்டியது போல பாலிவுட்டிலும் மாட்டியிருக்கிறார் இயக்குனர் அட்லீ . அந்த வகையில் ஜவான்,

படம் விஜயகாந்தின் படத்தின் காபி தானாம் .  அந்த வகையில் கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ரமணா.  இந்தப் படத்தை அப்படியே காப்பி அடித்து ஜவான் என்ற படத்தை எடுத்திருக்கிறாராம்,

இயக்குனர் அட்லீ . இன்னும் சொல்லப்போனால் ரமணா திரைப்படமே ஒரு உதவி இயக்குனரின் கதை தான் . அதை காப்பியடித்து தான்  இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ரமணா  படத்தை எடுத்திருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் அந்த காப்பி அடித்த கதையை இயக்குனர்  அட்லீயும் ,

காப்பியடித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பட்டாலும் இயக்குனர் அட்லீ  திருந்த மாட்டார் போல என்று கூறி வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *