April 28, 2024

முதலில் விவசாயி அப்பறம் தான் நடிகர் ..!! விவசாயியாக கலக்கும் நடிகர் ஜெயராமின் புகைப்படங்கள் ..!!

ஜெயராம் ஓர் பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகர் ஆவார் . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ஜெயராம் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான கோகுலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து புருஷா லட்சணம் ,மனசு ரெண்டும் புதுசு ,கோலங்கள்,

நாம் இருவர் நமக்கு இருவர் ,தெனாலி, பஞ்சதந்திரம் ,ஜூலி கணபதி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் ஜெயராம் . குறிப்பாக இவர் கமலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் நடிகர் ஜெயராம் தமிழ் ,தெலுங்கு,

மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் . தற்போது இவர் நான்கு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்தி ருக்கிறார்.  இப்படி சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக் கொண்டு வந்தாலும் ஜெயராம் ஒரு விவசாயியும் ஆவார் .அந்த வகையில்,

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மாட்டுப் பண்ணையை நடத்தி வருகிறார் நடிகர் ஜெயராம் . அது மட்டுமில்லாமல் இவர் சிறந்த விவசாயிக்கான விருதையும் வென்றிருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது …

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *