May 1, 2024

விரைவில் அம்மாவாக போகும் சமந்தா ..!! விவாகரத்துக்கு பிறகு இப்படியொரு முடிவா ..?? யாருமே எதிர்பார்க்காத ஒன்று ..!!

தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல டாப் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சமந்தா . தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை  தொடங்கிய சமந்தா கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான் ,கத்தி, 10 என்றதுக்குள்ள,

தங்க மகன், பெங்களூரு நாட்கள் , தெறி ,24 ,இரும்புத்திரை போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார் நடிகை சமந்தா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி , ஆங்கில மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு,

வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா . ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து ,

பெற்று பிரிந்து விட்டனர்.  மேலும் விவகாரத்துக்கு பிறகும் பல படங்களில் நடித்துக் கொண்டு வரும் சமந்தா தற்போது இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதற்கு ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில்,

இருந்து இரண்டு குழந்தைகளை விரைவில் சமந்தா தத்தெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் சமந்தாவின் செயலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *