April 28, 2024

அலப் பறை பண் ணும் அண் ணனி ன் விழு து கள் ..!! அடுத் த எம் ஜி ஆரா க விட மாட் டா ங்க போ ல ..!! அல்ல கைக ளால் படாத ப்பாடு படும் விஜ ய் ..!!

சமீப காலமாக சினிமாவை விட அரசியலில் களம் இறங்குவதற்காக தான் தீயாக வேலை செய்து வருகிறார் நடிகர் விஜய்.  குறிப்பாக எம்ஜிஆருக்கு பிறகு அரசியலுக்கு வந்த எந்த நடிகராலும்  பெரியளவில் ஜொலிக்க முடியவில்லை . இதனால் எம்ஜிஆரின் இடத்தை பிடிக்கலாம் என்ற திட்டத்தில் இருந்து வருகிறார் நடிகர் விஜய். ஆனால் அந்தக் கனவெல்லாம் அவருடைய அல்லக்கைகளால் ,

காணாமல் போய்விடும் போல , இதற்கு காரணம் என்னவென்றால் , நடிகர் விஜய் மாணவ மாணவிகளை நேரில் சந்தித்த விஷயம் , பட்டினி தினத்தில் சாப்பாடு போட்டது,  இரவு நேர பாடசாலை , காமராஜர் பிறந்தநாளில் மாலை அணிவித்தது போன்ற பல விஷயங்களை செய்தாலும் ,

இது அவரை வைத்து விளம்பரம் செய்வது போல தான் உள்ளது.  அப்படி செய்யும் ஒவ்வொரு உதவியிலும் விஜயின் புகைப்படம் கண்டிப்பாக இடம்பெறுகிறதாம் . அப்படி இந்த விளம்பரங்களை எல்லாம் விஜயின் ரசிகர்களை வைத்து செய்வது புஸ்ஸி ஆனந்த் தானாம் . இதைப் பார்த்த ,

தமிழ் திரைப்பட பிரபலங்களே  இது மிகவும் மட்டமான அரசியல் என்று விமர்சித்து தள்ளினார்கள்.  குறிப்பாக எந்த ஒரு அரசியல் புரிதலும்  இல்லாத விஜய் கொஞ்சம் கொஞ்சமாக காய் நகர்த்தி வரும் நிலையில், அவருடைய ரசிகர்கள் தேவையில்லாத அலப்பறைகளை,

செய்து விஜய்யின் கனவை பாழாக்கி விடுவார்கள் போல . குறிப்பாக விளம்பரம் தேடுவதில் விஜய்யை விட அவருடைய ரசிகர்கள் தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.  மேலும் இது குறித்து விஜய் நடவடிக்கை எடுத்தால் தான் அவருக்கு நல்லது என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *