May 3, 2024

நெல்சனை கழட்டிவிட்ட கலாநிதி மாறன் ..!! அடுத்த படத்தின் இயக்குனர் இவர் தானா ..?? 1000 கோடி வசூலுக்கு பிளான் போட்ட சன் பிக்சர்ஸ் ..!!

கடந்த மாதம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் .  இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது . இப்படி வெளியான திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.  அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் 650 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இப்படி இந்த திரைப்படம் பிரம்மாண்ட ,

வெற்றி பெற்றதால் ரஜினிகாந்த் ,நெல்சன் , அனிருத் போன்றவர்களுக்கு விலை உயர்ந்த கார்களை பரிசாக கொடுத்திருந்தார் கலாநிதி மாறன்.  அது மட்டுமல்லாமல் இயக்குனர் நெல்சனின் அடுத்த படத்தை தானே தயாரிப்பதாகவும் கூறியிருந்தார் கலாநிதி மாறன் .

இப்படி இருக்கும் நிலையில் தற்போது இயக்குனர்   நெல்சனை கழட்டி விட்டு இன்னொரு இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார் கலாநிதி மாறன் . அவர் வேறு யாருமில்லை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். அந்த வகையில்   மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக,

அறிமுகமான லோகேஷ் தொடர்ந்து கைதி ,மாஸ்டர் , விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.  இதை அடுத்து ரஜினியின் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளாராம்.  இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க உள்ளதாம்.

இந்நிலையில் இந்தப் படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் கலாநிதி மாறன் அடுத்து 1000  கோடிக்கு ரெடியாகிவிட்டார் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *