April 23, 2024

ஆரவ் முதல் அசீம் வரை ..!! காணாமல்போன பிக்பாஸ் டைட்டில் வின்னர்கள் ..!! என்ன செய்கிறார்கள் தெரியுமா ..??

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கப்பட்டது . அப்படி இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் இலிருந்து இப்போது வரை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார் . மேலும் முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் . ஆனால் இதன் பிறகு இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை .  இவரை தொடர்ந்து இரண்டாவது சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றவர் ,

ரித்விகா . மெட்ராஸ் படத்தின் மூலம் பிரபலமான ரித்விகா.  இதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது . இவரைத் தொடர்ந்து மூன்றாவது சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றவர் முகேன் ராவ் . வேலன் என்ற படத்தில் நடித்திருந்த முகேன் ராவ்,

அதன்பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை . இவரை தொடர்ந்து நடிகர் ஆரி அர்ஜுனன் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ஹீரோவாக நடித்த ஒரு திரை படம் கூட இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இவரை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5 வின் டைட்டில் வின்னர்,

பட்டத்தை வென்றவர் ராஜு . சீரியல் மூலம் பிரபலமான ராஜு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என்ன ஆனார் என்பது பலருக்கும் தெரியவில்லை.  இவரை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6  டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றவர் முகமத் அசீம் . இவரும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு படத்தில்,

ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியானது . ஆனால் இப்போது வரை அதைப்பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை . இப்படி பிக் பாஸில் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற போட்டியாளர்கள் யாருமே இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பெரிய வெற்றியை அடையவில்லை …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *