April 29, 2024

காமெடி நடிகை நளினியா இது ..?? இளம் வயதில் எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க ..!!

நளினி ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.  கடந்த 1981 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ராணுவ வீரன் என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை நளினி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து உயிருள்ளவரை உஷா, மனைவி சொல்லே மந்திரம், தங்கைக்கோர் கீதம், நூறாவது நாள், 24 மணி நேரம் ,உறவை காத்த கிளி, பிள்ளை நிலா போன்ற பல திரைப்படங்களில் நடித்து ,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் நடிகை நளினி தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே  கடந்த 1987 ஆம் ஆண்டு நடிகர் ராமராஜனை,

காதலித்து திருமணம் செய்து கொண்டார் நளினி . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர்.  ஆனால் திருமணமாகி 13 வருடங்களிலேயே நளினியும்,  ராமராஜனும்  விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . அப்படி ஆரம்பத்தில் கதாநாயகியாக கலக்கி கொண்டு ,

வந்த நளினி தற்போது காமெடி நடிகையாக நடித்துக் கொண்டு வருகிறார்.  இப்படி இருக்கும் நிலையில் இப்போது காமெடி நடிகையாக இருந்து வரும் நடிகை நளினியின் இளம்  வயது புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *