April 28, 2024

நான் உயிருடன் தான் இருக்கிறேன் ..!! பதறிப்போய் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்ட ” குத்து ” ரம்யா ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் குத்து.  இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா.  இந்தப் படத்திற்குப் பிறகு குத்து ரம்யா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார் . பின்னர் இந்தப் படத்தைத் தொடர்ந்து கிரி, பொல்லாதவன், வாரம் ஆயிரம்,

சிங்கம் புலி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ரம்யா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு வந்தார் . பின்னர் சினிமாவை விட்டு அரசியலில் குதித்த ரம்யா காங்கிரஸ் கட்சி சார்பில் ,

போட்டியிட்டு வெற்றி பெற்றார் . இப்படி இருக்கும் நிலையில் 40 வயதாகியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் ரம்யா  இன்று மாரடைப்பால் உயிரிழந்ததாக செய்திகள் பரவி வருகிறது.  இதனால் தமிழ்  ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் .

ஆனால் உண்மையில் இது வதந்தி தானாம் .  இந்நிலையில் இந்த பொய்யான தகவலை பார்த்து  பதறிப் போன நடிகை ரம்யா நான் உயிருடன் தான் இருக்கிறேன் என்று தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *