April 29, 2024

வெறும் 18 வயசு தான் ஆகுது ..!! ” தெய்வத்திருமகள் ” சாராவுக்கு இத்தனை கோடி சொத்தா ..?? வெளியான தகவலை பார்த்து வாய்ப்பிளந்த ரசிகர்கள் ..!!

சாரா அர்ஜுன் ஓர் வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார் . கடந்த 2011 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சாரா அர்ஜுன் . இப்படி வெளியான முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து விட்டார் சாரா அர்ஜுன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சித்திரையில் நிலாச்சோறு, சைவம் ,விழித்திரு ,

சில்லு கருப்பட்டி போன்ற பல படங்களில் நடித்திருந்தார் சாரா அர்ஜுன். அதோடு  சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் சிறுவயது நந்தனியாக நடித்து அசத்தியிருந்தார் சாரா அர்ஜுன் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல்,

தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அப்படி ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்த சாரா அர்ஜுன் தற்போது கதாநாயகியாக ஒரு சில படங்களிலும் கமிட்டாகி,

நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் சாரா அர்ஜுன் சேர்த்து வைத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  அந்த வகையில் தற்போது 18 வயதாகும்  சாரா அர்ஜுனின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 10 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது .

இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலேயே இவ்வளவு கோடி சொத்தா என்று ஆச்சி ரியத்தில் கூறி வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *