April 29, 2024

எம் ஜி ஆர் மீசை , பெரிய கண்ணாடி ..!! ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய விஜய் சேதுபதி ..!! அடுத்த படத்தின் கெட்டப் இது தானா ..??

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகர்களில் நடிகர் விஜய் சேதுபதி மட்டும் கொஞ்சம் வித்தியாசமானவர் என்று தான் சொல்ல வேண்டும் . காரணம் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது ஹீரோ ,வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என்று கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் ஸ்கோர் செய்து அசத்தி வருகிறார்.  இதனாலேயே நடிகர் விஜய் சேதுபதியை ,

தமிழ் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் . அதுவும் அண்மைக்காலமாக வில்லனாக நடிப்பதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.  இப்படி இருந்த நிலையில் சமீபத்தில் உடல் எடை அதிகரித்து ரசிகர்களின் ,

கேலி கிண்டலுக்கு ஆளானார் நடிகர் விஜய் சேதுபதி.  இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி . அந்த வகையில் பருத்திவீரன் படத்தின்  இயக்குனரான அமீர் தற்போது ,

புதிய ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருக்கிறார் . அந்த ஹோட்டலின் திறப்பு விழாவிற்கு நடிகர் விஜய் சேதுபதி புதிய தோற்றத்தில் வந்திருக் கிறார் . அதாவது எம்ஜிஆர் மீசை , பெரிய கண்ணாடி என்று ஆளே வித்தியாசமாக மாறி இருக்கிறார் இன்னும் சொல்லப் போனால் நம்ம ,

விஜய் சேதுபதியா இது .? என்று ரசிகர்களே கேட்கும் அளவிற்கு தன்னுடைய கெட்டப்பை மாற்றி இருக்கிறார் . இதைப் பார்த்த பலரும் அடுத்த படத்தையும் கெட்டப் இதுதானா .? என்று கூறி வருகின்றனர் . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *