April 29, 2024

என் படத்தில் பிரேம்ஜி நடிக்க கூடாது ..!! முன்கூட்டிய கண்டிசன் போட்ட விஜய் ..!! காரணத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள் ..!!

தற்போது நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கு உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் . ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் 20 வருடங்கள் கழித்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .  பொதுவாகவே இயக்குனர் வெங்கட் பிரபுவின் படத்தில்,

கதை இருக்குதோ இல்லையோ .? அவருடைய தம்பி கண்டிப்பாக இருப்பார்.  அப்படி சென்னை 600028 படத்தில் தொடங்கிய இவர்களுடைய கூட்டணி வெங்கட் பிரபு  கடைசியாக இயக்கிய கஸ்டடி படம் வரை நீண்டு கொண்டே போனது . அந்த அளவிற்கு தன்னுடைய,

படங்களில் பிரேம்ஜியை நடிக்க வைத்து பிரபலமாக்கினார் அண்ணன்  வெங்கட் பிரபு . இப்படி இருக்கும் நிலையில் வெங்கட் பிரபு அடுத்ததாக விஜய்யை வைத்து தளபதி 68 என்ற படத்தை இயக்க இருக்கிறார் . இந்த படத்திலும் கண்டிப்பாக பிரேம்ஜிக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம்,

கொடுக்கப்பட்டிருக்கும் என்று ரசிகர்கள் கூறி வந்தனர் . ஆனால் சில வருடங்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி விஜய் குறித்து பேசி இருந்தனர் . அப்போது ஒருமுறை விஜய்யை  சந்தித்தபோது உங்க அண்ணனும் நானும் பண்ணும் ,

படத்தில் மட்டும் நீ நடிக்க கூடாது.  ஏனென்றால் நீ தல ஆளு என்று பிரேம்ஜியிடம்   நகைச்சுவையாக கூறியிருந்தாராம் நடிகர் விஜய் . இதனால் பிரேம்ஜி இந்த படத்தில் நடிப்பாரா என்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *