May 1, 2024

தேசி ய வி ருதி லும் அ ரசிய லா ..?? தெலு ங்கு படங்க ளுக் கு 9 விரு து கள் ..!! தமி ழ் படங்க ளு க்கு வெறு ம் 4 வி ருது கள் ..!! ஏமா ற்றத் தில் தமி ழ் ரசி கர்க ள் ..!!

இந்திய சினிமாவைப் பொறுத்தவரை தேசிய விருது என்பது ஒரு மிகப்பெரிய விருதாக கருதப்படுகிறது . அப்படி ஒவ்வொரு வருடமும் சிறந்த படங்களுக்கு தேசிய விருதை வழங்கி வருகிறார்கள் . இந்நிலையில் கடந்த 2022 ம் வருடத்திற்கான தேசிய விருது பட்டியலை அறிவித்துள்ளார்கள்.  அந்த வகையில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் சிறந்த சண்டை பயிற்சி, சிறந்த நடனம் ,சிறந்த பின்னணி இசை ,

சிறந்த படம் என்று ஏழு தேசிய விருதுகளை குவித்துள்ளது . இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை குவித்துள்ளது. அதுவும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு கிடைத்தது யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.  இப்படி ,

தெலுங்கு திரைப்படங்கள் 9 தேசிய விருதுகளும் , ஹிந்தி திரைப்படங்கள் எட்டு தேசிய விருதுகளும் குவித்துள்ளது.  ஆனால் இந்த முறை தமிழ் சினிமா வெறும் 4 தேசிய விருதுகளை மட்டும் தான் வென்றுள்ளது . அந்த வகையில் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்திற்கு ,

இரண்டு தேசிய விருதுகளும்,  இரவின் நிழல் மற்றும் ராக்கெட்ரி போன்ற படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளும் கிடைத்துள்ளது . ஆனால் கடந்த வருடம் ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை போன்ற பல தரமான திரைப்படங்கள் வெளியாகி இருந்தது.  இந்த படங்களுக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று ,

எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் . இன்னும் சொல்லப்போனால் தேசிய விருதிலும் அரசியல் தான் நடந்து வருகிறது என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *