May 3, 2024

இதை விட ஒரு மகளுக்கு என்ன வேண்டும் ..!! லால் சலாம் படத்திற்காக ரஜினி செய்த விஷயம் ..!! வைரலாகும் தகவல் உள்ளே ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா . இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற ஐஸ்வர்யா தொடர்ந்து வை ராஜா வை ,சினிமா வீரன் போன்ற படங்களை இயக்கியிருந்தார் . இதன் பிறகு பல வருடங்களாக எந்த படங்களையும் இயக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா ,

மீண்டும் லால் சலாம் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.  இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் , செந்தில் ,கே எஸ் ரவிக்குமார், லிவிங்ஸ்டன், நிரோஷா, அனந்திகா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் ,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் . மேலும் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.  இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய மகளுக்காக உருக்கமான பதிவு ,

ஒன்றை போட்டு இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . அந்த வகையில், என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு, என் அன்பு சலாம் உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று ,

பகிர்ந்தது மட்டுமல்லாமல் மகளுடன் எடுத்த ரேர் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து இருந்தார் ரஜினிகாந்த்.  மேலும் இதுவரை தன்னுடைய படத்திற்காக கூட இப்படி ஒரு பதிவை சூப்பர் ஸ்டார் போட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *