April 25, 2024

விஜய் அண்ணாவுக்கு நான் போட்டியா ..?? காமெடி பண்ணாதீங்க ..!! வைரலாகும் உதயநிதி ஸ்டாலின் போட்ட பதிவு ..!!

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே அவர்தான் அடுத்த முதலமைச்சர் என்று அவருடைய ரசிகர்கள் குஷியில் கூறி வருகின்றனர்.  மேலும் விஜய்க்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலின்,  சீமான் போன்ற பல பிரபலங்கள் இருப்பார்கள் என்று பலரும் கூறி வருகின்றனர் . அந்த வகையில் விஜய் கட்சி தொடங்கியதும் சீமான் , உதயநிதி இருவருமே வாழ்த்து தெரிவித்து இருந்தனர் . அப்படி ஆரம்பத்தில் ,

விஜய் நடித்த குருவி படத்தை தயாரித்திருந்தார் உதயநிதி ஸ்டாலின்.  அப்போதிலிருந்து இருவரும்  நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.  ஆனால் அண்மைக்காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே சின்ன மன கசப்பு இருந்து வருவதாக பேசப்படுகிறது.

இருந்தாலும் விஜய்யை தன்னுடைய கட்சியின் பக்கம் இழுப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்து இருந்தாராம் உதயநிதி ஸ்டாலின்.  இருந்தாலும் விஜய் யாருக்கும் ஆதரவு கிடையாது என்று கட்சி ஆரம்பித்த நாளிலேயே கூறிவிட்டார்  இப்படி இருக்கும் நிலையில் 13 வருடங்களுக்குப் பிறகு,

உதயநிதி ஸ்டாலின் போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.  அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமான நேரத்தில் நீங்கள் விஜய்க்கு போட்டியாக வருவீர்களா.?  என்று நெட்டிசன் ஒருவர் கேட்டிருக்கிறார்.  அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் ,

காமெடி பண்ணாதீங்க ப்ரோ , விஜய் அண்ணா கூட போய் போட்டி போட நான் என்ன லூசா.? என்று பதிவிட்டு இருந்தார்.  அந்த பதிவு இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *