May 8, 2024

வி ஜய் அர சியலு க்கு வந் தால் ..!! என்னு டை ய முழு ஆத ரவு அவரு க்கு தா ன்..!! முன்கூட் டியே சொ ல்லிய பி ரப ல நடி கை ..!! விஜய் க்கு இப்படி யொ ரு விசு வா சியா ..??

தற்போது சினிமா நட்சத்திரங்களும் அரசியலுக்கு வருவது சாதாரண ஒன்றாக ஆகிவிட்டது.  அப்படி சமீப காலமாக அரசியலில் களமிறங்கதற்காக பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார் நடிகர் விஜய். அந்த வகையில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ , மாணவிகளை நேரில் சந்தித்து பரிசுகளையும் சான்றிதழ்களையும்,

வழங்கி இருந்தார் நடிகர் விஜய் . மேலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக விஜய் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் இன்னும் விஜய் கட்சி கூட ஆரம்பிக்கவில்லை . அதற்குள் விஜய்க்கு ஆதரவாக நான் இருப்பேன் என்று கூறியுள்ளார்,

பிரபல நடிகை ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகை வனிதா விஜயகுமார் தான். கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமான வனிதா விஜயகுமார் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இப்படி இருக்கும்,

நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வனிதாவிடம்,  விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர் . அதற்கு பதில் அளித்த வனிதா , விஜய் ஒரு புத்திசாலியான மனிதர் , அவர் எப்போதும் வருங்காலத்தை யோசித்து தான்,

பல விஷயங்களை செய்வார்.  அப்படி அவர் அரசியலுக்கு வந்தால் நான் அவருக்கு உறுதுணையாக கூடவே நிற்பேன் . அது மட்டுமல்லாமல் அவருக்கு உண்மையான தொண்டராகவும் இருப்பேன் என்று கூறியிருந்தார் வனிதா விஜயகுமார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *