April 28, 2024

மூக்கு த்தி அம்ம னா க நடி க்க இ ரு ந்த 37 வய து நடி கை ..!! இ வ ரை போ ய் எப்ப டி ஆர் ஜே பா லா ஜி தேர் வு செ ய் தார் ..?? சரி யான நேரத் தில் வாய் ப்பை வா ங் கிய நயன் தா ரா ..!!

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில கதாபாத்திரங்களுக்கு ஒரு சில நடிகைகள் மட்டும்தான் சரியாக வருவார்கள்.  அப்படி அம்மன் கதாபாத்திரம் என்றால் ஒரு சில நடிகைகளுக்கு மட்டும்தான் 100 சதவீதம் சரியாக வரும்.  அப்படி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் , நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடித்திருந்தார் நடிகை நயன்தாரா.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . ஆனால் இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக முதலில் நடிக்க இருந்தது வேறொரு நடிகை தானாம் .  அவர் வேறு யாரும் இல்லை கமல்ஹாசனின் மூத்த மகளான  நடிகை ஸ்ருதிஹாசன் தான் .

முதலில் இவரைத்தான் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார் ஆர் ஜே பாலாஜி . அந்த நேரத்தில் தான் எதர்ச்சியாக நயன்தாராவிடம் இந்த கதையை கூறி இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி. பின்னர் அவரும் ஓகே சொன்னதால்தான் இந்த படம்,

எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இருந்தாலும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தால் இந்த அளவிற்கு இந்த திரைப்படம் நன்றாக வந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.  காரணம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்திருந்தார்கள் .

அந்த ரீமேக் படத்தில் சாய் பல்லவி நடித்திருந்த மலர்  கதாபாத்திரத்தில்  நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆளானார் . அப்படி மூக்குத்தி அம்மன் படத்திலும் நடித்திருந்தால் அதே  நிலைமை தான் வந்திருக்கும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *