May 3, 2024

மம்மூட்டிக்கு 72 வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க..!! வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ ..!!

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போல மலையாள சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு வருபவர் தான் நடிகர் மம்மூட்டி . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த மம்மூட்டி ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக மாறினார்.  அதுவும் அப்போதெல்லாம் வருடத்திற்கு 10 திரைப்படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகர் மம்மூட்டி.

இப்படி மலையாள சினிமா உலகில் கலக்கிக் கொண்டு வந்த மம்மூட்டி கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான மௌனம் சம்மதம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர்  இந்த படத்தை தொடர்ந்து தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா, மக்கள் ஆட்சி,

மறுமலர்ச்சி ,  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . குறிப்பாக இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி , ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.  இதையடுத்து சமீபத்தில் 72 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய,

நடிகர் மம்மூட்டி இன்னும் 25 வயது நடிகர் போல தான் இருந்து வருகிறார் . இந்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு 72 வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *