April 28, 2024

மாம ன்ன ன் படத்தா ல் வடிவே லுவி ன் வாழ்க் கையி ல் நட ந்த அதி சய ம் ..!! இதெ ல்லா ம் நம் பற மாதி ரி இல் லை யே ..?? அப்ப டி என் ன நட ந்தது தெ ரி யுமா ..??

சமீப காலமாக நகைச்சுவை நடிகர்களும் தரமான நடிகர்களாக மாறி வருகின்றனர் . அப்படி ஆரம்பத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கி கொண்டு வந்த வடிவேலு சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  அதுவரை வடிவேலுவை காமெடியனாக பார்த்து வந்த ரசிகர்களுக்கு,

இந்த திரைப்படம் கொஞ்சம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.  காரணம்,  அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகர் வடிவேலு . இதனால் இதற்கு தற்போது பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது . மேலும் பல வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் ,

தவித்து வந்த வடிவேலுவுக்கு மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.  அது மட்டுமல்லாமல் வடிவேலு என்று சொன்னாலே அவருடன் நடித்தவர்களே அவரைப் பற்றிய தவறான விமர்சனங்களை மட்டுமே கூறி வந்த நிலையில்,  மாமன்னன் படத்திற்கு பிறகு அவரைப் பற்றி ,

எல்லோரும் நல்ல விஷயங்களை மட்டுமே பகிர்ந்து வருகின்றனர் . குறிப்பாக வடிவேலு தன்னுடன் நடித்த துணை நடிகர்களுக்கு தயாரிப்பாளர்களிடம் பேசி அதிக சம்பளம் வாங்கி கொடுத்ததாகவும் கூறி வருகின்றனர்.  மேலும் அவருடன் நடித்த பாதி நடிகர்கள் அவரைப் பற்றி தவறாக கூறி வந்த நிலையில் ,

தற்போது ஒரு சில நடிகர்கள் அவரைப் பற்றி நல்ல விஷயங்களை பகிர்ந்து வருவது பலருக்கும் நம்ப முடியாத விஷயமாகவே இருந்து வருகிறது . இருந்தாலும் இவர் மாமன்னன் போன்ற அழுத்தமான கதை களங்களை தேர்வு செய்து நடித்து வந்தால் அவருக்கு இன்னும் வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *