May 6, 2024

ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே தமிழ் நடிகை இவர் தான் ..!! ரஜினி , விஜய் கிட்ட கூட இல்லை ..!! கோடிகளில் புரளும் நம்பர் நடிகை ..!!

பொதுவாகவே சினிமா உலகில் நடிகைகளை விட நடிகர்கள் தான் அதிக சம்பளம் வாங்கி வருகிறார்கள் . இதனால் விலை உயர்ந்த கார் முதல் வீடுவரை எல்லாவற்றையும் வைத்திருப்பார்கள் . ஆனால் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கிறாராம் ஒரு தமிழ் நடிகை.  அவர் வேறு யாருமில்லை நடிகை நயன்தாரா தான் . எந்த ஒரு சினிமா பின்புல மும் ,

இல்லாமல் தன்னுடைய திறமையை நம்பி சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை நயன்தாரா.  அப்படி நடிக்க வந்த குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக  மாறிவிட்டார் நடிகை நயன்தாரா . கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு,

மேலாக தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும்  நடிகை  நயன்தாரா கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார்.  இதன் பிறகு தன்னுடைய கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார் நடிகை நயன்தாரா.

குறிப்பாக தமிழ் சினிமாவிலேயே 10 கோடி சம்பளம் வாங்கும்  ஒரே நடிகையும்  நயன்தாரா மட்டும்தான்.  அதோடு தென்னிந்திய சினிமா உலகிலேயே ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே நடிகையும்  நடிகை நயன்தாரா மட்டும் தானாம் .  அந்த வகையில்  நயன்தாரா வைத்திருக்கும்,

ஜெட் விமானத்தின் விலை 50 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ,  விஜய் போன்ற நடிகர்களிடம் கூட இந்த ஜெட் விமானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *